இன்னும் 5 விக்கெட்டுகள்தான்.. அர்ஷ்தீப் சிங் படைக்க உள்ள மாபெரும் சாதனை

 தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அர்ஷ்தீப் சிங் இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 92 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் இன்னும் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைப்பார். இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
 

அந்த பட்டியல்:-

  1. சாஹல் – 96 விக்கெட்டுகள்
  2. அர்ஷ்தீப் சிங் – 92 விக்கெட்டுகள்
  3. புவனேஸ்வர் குமார் – 90 விக்கெட்டுகள்
  4. பும்ரா – 89 விக்கெட்டுகள்

- Advertisement -

Comments are closed.