திருச்சியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவு…!

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகத்துறை நிர்வாக அனுமதி வழங்கியது. 4 ஏக்கர் பரப்பளவில் 82 பேருந்துகளை கையாளும் வசதியுடன் பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. 2 கழிப்பறை வளாகம், 31 கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

- Advertisement -

Comments are closed.