ஓ.டி.டி:ஜனவரி மாதம் வெளியாகும் புஷ்பா…!

புஷ்பா 2 தி ரூல் படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர். கடந்த 5-ந் தேதி வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெறும் 6 நாட்களில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. தற்போது வரை ரூ.1,409 கோடி வரை வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ.1,500 கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.