விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து…
விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயக சதுர்த்தியின் புனிதமான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான திருவிழா அறிவு, ஞானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் அதே வேளையில், பணிவு மற்றும் கடமையைத் தழுவுவதற்கு மக்களை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஞானம் என்பது முக்தியை விரும்புபவருக்கு அறியாமையை அழிக்கிறது. செல்வம் பக்தனுக்குத் திருப்தி அளிக்கிறது. அதனால், ஞானத்தையும், செல்வத்தையும் அளிக்கும் விநாயகரை அனைவரும் வணங்குவோம். யாரிடமிருந்து தடைகள் அழிகிறதோ, யாரிடமிருந்து காரியம் நிறைவேறுகிறதோ, அந்த விநாயகரை நாம் எப்போதும் கும்பிட்டு வணங்குவோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Comments are closed.