பிரதமர் மோடி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து…!

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாரத பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Comments are closed.