தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் மீண்டும் சிக்கல்?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ந் தேதி நடத்தப்படும் என்று நேற்று காலை நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் மாநாடு நடைபெறுவதாக அறிவித்துள்ள தேதியில் இருந்து 3 நாட்கள் கழித்து தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகை காலம் என்பதால் வழக்கத்திற்கும் மாறாக சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு விஜய் அறிவித்துள்ள தேதியில் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்கள் முன்பாக இம்மாநாடு நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால் அந்த சமயத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். எனவே அவர்கள் அறிவித்துள்ள தேதியில் அனுமதி வழங்கலாமா? என்பது குறித்து உரிய முறையில் ஆலோசனை நடத்திய பிறகே தெரிவிக்கப்படும் என்றனர்.
Comments are closed.