பிஎஸ்எல்வி சி-37: 104 செயற்கைக்கோள்களின் அற்புத பயணம்!

2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி – சி37 ராக்கெட், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புவிக்கு திரும்பியது. இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, 2017-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட காா்டோசாட்-2 டி என்ற 714 கிலோ எடை கொண்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் 103 மற்ற செயற்கைக்கோள்கள் 510 கி.மீ. தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. ராக்கெட்டின் நான்காம் நிலை, கடந்த 6-ஆம் தேதி புவி வளிமண்டல பாதைக்குள் நுழைந்து, வட அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. இது விண்வெளிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -

Comments are closed.