தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை நீடிப்பு : வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்…

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (10-10-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரேபிக் கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது எனவும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 13,14ம் தேதிகளில் மழை பெய்யும். உ.பி., ம.பி., குஜராத்தின் சில பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் விலகுகிறது” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Comments are closed.