மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த்..!!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. அதேபோல், பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும், இன்று (01/10/2024) காலை மருத்துவப் பரிசோதனை நடைபெற இருப்பதால், முன்கூட்டியே பேசியபடி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments are closed.