தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

வங்கக்கடலில் நாளை மறுநாள் (நவ.23ம் தேதி) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவ.25-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், நவ.26-ம் தேதி தமிழ்நாட்டில் கன முதல் மிககனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்ததாக தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் வலுப்பெறக் கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Comments are closed.