குறைந்த விலையில் 5ஜி போன் அறிமுகம் செய்த ரெட்மி….!

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரெட்மி A3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.88 இன்ச் HD+ ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 4ஜிபி வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

- Advertisement -

Comments are closed.