பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரத்து நீர் அதிகரித்துள்ளது. இதனால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியிலிருந்து 1,000 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கமாகும். இதன் உயரம் 35 அடியாகவும், கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி ஆகும். தற்போது, நீர் இருப்பு 34.05 அடியாகவும், கொள்ளளவு 2,839 மில்லியன் கன அடி ஆக உள்ளது.

மழை தொடர்ந்ததால், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து 35 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பாதுகாப்பு கருதி,   1,000 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கொசஸ்தலை ஆற்றின் இருபுறத்தில் உள்ள கிராமங்கள்:

  • நம்பாக்கம்
  • கிருஷ்ணாபுரம்
  • ஆட்ரம்பாக்கம்
  • ஒதப்பை
  • நெய்வேலி
  • எறையூர்
  • பீமன்தோப்பு
  • கொரக்கதண்டலம்
  • சோமதேவன்பட்டு
  • மெய்யூர்
  • வெள்ளியூர்
  • தாமரைப்பாக்கம்
  • திருக்கண்டலம்
  • ஆத்தூர்
  • பண்டிக்காவனூர்
  • ஜெகநாதபுரம்
  • புதுக்குப்பம்
  • கன்னிப்பாளையம்
  • வன்னிப்பாக்கம்
  • அருவன்பாளையம்
  • சீமாவரம்
  • வெள்ளிவாயல்சாவடி
  • நாப்பாளையம்
  • இடையன்சாவடி
  • மணலி
  • மணலி புதுநகர்
  • சடையான்குப்பம்
  • எண்ணூர்

இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் எனவும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Comments are closed.