திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : நெடுஞ்சாலைத்துறை-மாநகராட்சி நடவடிக்கை…!
திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் ஏராளமான உணவகங்கள், பெட்டிக்கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்று வந்தனர். இதனால் தினந்தோறும் பகல் நேரத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் 18-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தனர். அந்த காலக்கெடு முடிவடைந்ததால் நேற்று காலை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் இருந்து அரிஸ்டோ பாலம் வரை 30 கடைகளின் முன்புறம் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள்
Comments are closed.