அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு – பிராவோ அறிவிப்பு…
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. இவர் 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்தார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த பிராவோவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதியில் வெளியேறினார். அந்த போட்டியில் அவர் விளையாடி அணி தோல்வியடைந்தது. அதுதான் அவரது கடைசி போட்டி என ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து பிராவோ ஓய்வு பெறுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
Comments are closed.