மிஸ் யுனிவர்ஸ் இந்திய அழகி: மகுடம் சூடினார் 19 வயது இளம்பெண்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் முன்னாள் மிஸ் யுனிவர்ஸும், நடிகையுமான ஊர்வசி ரவுத்தாலா நடுவராக பங்கேற்றார். இந்த போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் குஜராத்தை சேர்ந்த 19 வயது ரியா சிங்கா அழகி பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு ஊர்வசி கிரீடத்தை சூட்டினார். இதன் மூலம் இந்த வருடத்தின் இறுதியில் நடக்க உள்ள 2024 மிஸ் யுனிவர்ஸ் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பை ரியா பெற்றுள்ளார். மேலும் போட்டிக்கு பிறகு ரியா தான் இந்த பட்டத்தை வெல்ல மிகவும் கடினமாக உழைத்ததாகவும் இந்த பட்டத்திற்கு தான் தகுதியானவள் என்று நினைப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து ரியா சிங்காவுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.
Comments are closed.