சமயபுரம் மாரியம்மன் கோவில்உண்டியல்:ரூ.1¼ கோடி காணிக்கை 3¾கிலோ தங்கமும் கிடைத்தது…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாதம் முதல் முறையாக நேற்று அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோவில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள், கோவில் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்களை திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 82 ஆயிரத்து 683 ரொக்கமும், 3 கிலோ 785 கிராம் தங்கமும், 4 கிலோ 430 கிராம் வெள்ளியும் மேலும் 327 வெளிநாட்டு பணமும், 1,444 நாணயங்களும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments are closed.