திருச்சி பஞ்சப்பூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல்…!
திருச்சி பஞ்சப்பூர் அருகே நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரியில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அந்த லாரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 190 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களில் இருந்து நான்கு உணவு மாதிரிகள் எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. மீதமுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் 3 பேரையும் மேல்நடவடிக்கைக்காக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், புகையிலை பொருட்கள் விற்க உடந்தையாக இருந்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.
Comments are closed.