‘இந்தியன் 3’ ரீ ஷூட் என ஷங்கர் கூறியுள்ளார்.

ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான கிளாசிக் ஹிட் படம் “இந்தியன்”. இந்த படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்குப் பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தியன் 2 படத்தின் தோல்வியை அடுத்து இந்தியன் 3 படத்திற்கு மக்களிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இல்லை என்பதால் திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆனால் இதற்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் உடன்படவில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் 2 போல இந்தியன் 3 ஆகிவிடக்கூடாது என்பதால், அந்த கதைக்கு தேவையான காட்சிகளை ரீ -ஷூட் எடுக்க கமல்ஹாசன் கூறியுள்ளாராம். எனவே தற்போது சங்கர் தான் ராம் சரணை வைத்து இயக்கியுள்ள கேம் செஞ்சர் புரமோஷன் பணிகள் முடிந்த உடன் இந்தியன் 3 ரீ – சூட் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.