‘சிவா மனசுல சக்தி’ பார்ட் 2 – இயக்குனர் கொடுத்த அப்டேட்…!

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் சிவா மனசுல சக்தி [SMS]. ஹீரோயினாக நடித்த அனுயா, தாயாக நடித்த ஊர்வசி என அனைவரும் கதாபாத்திரத்தோடு கச்சிதமாக பொருந்திய இப்படம் எதார்த்தமான கதைக்களத்துடன் ஃபீல் குட் படமாக அமைத்திருந்தது. இந்த சூழலில் சிவா ‘மனசுல சக்தி 2’ படத்தை எடுக்கும் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் ராஜேஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். SMS 2 படத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும், நடிகர் ஜீவாவிடமும் இது பற்றி பேசி இருப்பதாகவும் ராஜேஷ் கூறியுள்ளார்.

- Advertisement -

Comments are closed.