ஷார்ட்ஸ் வீடியோக்கள் : 3 நிமிடம் பதிவேற்றலாம்…

கூகுள் நிறுவனத்தின் யூடியூப்பில், ஒரு நிமிடத்திற்கு வீடியோக்களை ஷார்ட்ஸாகப் பதிவேற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஷார்ட்ஸின் நீளத்தை அதிகரிக்கப் பயனாளர்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்ததாக கூகுள் தெரிவித்துள்ளது. அதனை ஏற்று, அக்டோபர் 15 ஆம் தேதி முதல் யூடியூப்பில் 3 நிமிடங்களுக்கு ஷார்ட்ஸ் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இன்ஸ்டாகிராமில் எளிமையாக ரீல்ஸ் உருவாக்குவதைப் போன்று, யூடியூப்பில் ஷார்ட்ஸ் உருவாக்கும் வசதியும் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.