சிறப்பாக நடந்து முடிந்த சித்தார்த்-அதிதி ராவ் திருமணம்…!
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து தற்போது திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து தெலுங்கானாவில் இருக்கும் கோவிலில் இருவீட்டார் சம்பந்தத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இந்நிலையில் சித்தார்த்-அதிதி திருமணம் கோவிலில் வைத்து தென்னிந்திய முறைப்படி எளிமையாக நடந்து முடிந்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்களை அவர்களே வெளியிட புதிய ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Comments are closed.