முதல் டி20 போட்டி: அயர்லாந்தை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா…

அயர்லாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் சேர்த்தது. பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டல் அதிரடியாக விளையாடினார். தென்ஆப்பிரிக்கா 17.4 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையலிான 2-வது போட்டி நாளை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் அக்டோபர் 2-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் அபுதாபியில் நடக்கிறது.

 

- Advertisement -

Comments are closed.