விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு.

விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,315 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம்   வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறப்பட்டு இருப்பதாவது,விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு (5, 6 ,7மற்றும் 8-ம்தேதிகளில்) தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் ,சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை தமிழகம் முழுவதும் இயக்க திட்டமிட்டுள்ளது.  சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 05/09/2024, 06/09/2024 (வெள்ளிக் கிழமை) மற்றும் 07/09/2024 (சனிக் கிழமை) ஆகிய நாட்களில் 1030 பேருந்துகளும், மற்றும் 08/09/2024 (ஞாயிற்றுக் கிழமை) அன்று கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பேருந்துகளும்,சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 06/09/2024 (வெள்ளிக் கிழமை மற்றும் 07/09/2024 (சனிக்கிழமை) அன்று 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து 06/09/2024 வெள்ளிக்கிழமை மற்றும் 07/09/2024 (சனிக்கிழமை) அன்று 20 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.  தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.