வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை…!
இலங்கை கடலோர பகுதியில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதிதாக உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் எதிரொலியாக அதிக கனமழையும், மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.
Comments are closed.