வரப்போகுது சூப்பர் இன்டெலிஜென்ட் ஏஐ…!ஆபத்தில் OpenAI…?

OpenAl நிறுவனத்தின் முன்னாள் இணை நிறுவனர் இல்யா புதியதாகப் பாதுகாப்பான ஒரு Superintelligence ஏஐ தொழில் நுப்டத்தை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக அவர் புதிய நிறுவனத்தைத் தொடங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.உலகத்தையே புரட்டிப்போடக்கூடிய தொழில் நுட்பமாக இந்த நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்புதான் ChatGPT. அதன் மூளையாக இருந்த நிறுவனம்தான் ஓபன்ஏஐ.கடந்த மே மாதம் OpenAI லிருந்து வெளியேறிய இவர், அதன் இணை நிறுவனர்களான Daniel Gross, Daniel Levy ஆகிய இருவருடன் இணைந்து Safe Superintelligence உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த புதிய நிறுவனமானது, மனித நுண்ணறிவை மிஞ்சும் “அதிக நவீன நுண்ணறிவு”- கொண்ட AI என்று அவர் கூறியுள்ளார். இல்யா சுட்ஸ்கேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல விளக்கங்களையும் திட்டங்களையும் விளக்கியுள்ளார். இவருடன் Palo Alto, California, and Tel Aviv ஆகிய நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன. இவர் புதியதாக ஒரு அதி நுண்ணறிவு Superintelligence உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளதார்.இந்நிலையில்தான் இவர் Superintelligence ஏஐ தொழில்நுட்பம் ஒன்றைப் பாதுகாப்பு அம்சங்கள் நிரம்பியதாகக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதற்கான அறிவிப்பையும் கொடுத்துள்ளார். இவர் அறிவிப்பு வெளியான உடன் இவரது தளத்தை ஒரே நாளில் 3.6 கோடி இந்தியர்கள் பார்வையிட்டனர். எந்த ஒரு புதிய தொழில் நுட்பத்தையும் உடனே அறிந்து கொள்வதில் இந்தியர்களுக்கு உள்ள ஆர்வத்தின் அடையாளம்தான் இந்த எண்ணிக்கை.

- Advertisement -

Comments are closed.