சூர்யாவின் 45வது திரைப்படத்தை இயக்கும் ஆர்.ஜே. பாலாஜி…
மூக்குத்தி அம்மன்’, `வீட்ல விஷேஷம்’ ஆகிய படங்கள் மூலம் இயக்குநரான ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ” இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் என்டர்டெயினராக இருக்கும்!” எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த கூட்டணி புதியதொரு கூட்டணியாக இருப்பதால் திரைப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் அருவாள், குதிரை என இடம் பெற்றுள்ளதால். திரைப்படம் ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Comments are closed.