த.வெ.க. முதல் மாநாட்டிற்கு நாளை ஆலோசனை..

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில், த.வெ.க. முதல் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை 3.00 மணிக்கு பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில்  நடைபெற உள்ளது. த.வெ.க. பொதுச்செயலாளர்  ஆனந்த் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
  

- Advertisement -

Comments are closed.