ஆவின் பாலகம் நடத்துவோருக்கு இலக்கு நிர்ணயம் …!
சிறிய ஆவின் பாலகம் நடத்துவோர் மாதத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தல்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. ஆவின் நிறுவனம், விவசாயிகளிடம் இருந்து தினசரி சராசரியாக 35 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.ஆவின் பாலகம் நடத்துவோருக்கு குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து, விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். சரியாக விற்பனை செய்யாதவர்களின் பாலகத்தை ரத்துசெய்யும் நடவடிக்கையும் நடைபெறுகிறது.
Comments are closed.