டெஸ்ட் கிரிக்கெட்: ஒரு வருடத்தில் அதிக சிக்சர்.. உலக சாதனை படைத்த ஜெய்ஸ்வால்…!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஜெய்ஸ்வால் நடப்பாண்டில் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் 34 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் நியூசிலாந்தை சேர்ந்த பிரண்டன் மெக்கல்லம் 33 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
- ஜெய்ஸ்வால் – 34 சிக்சர்கள்.
- பிரண்டன் மெக்கல்லம் – 33 சிக்சர்கள்.
- பென் ஸ்டோக்ஸ் – 26 சிக்சர்கள்.
- கில்கிறிஸ்ட்/சேவாக் – 22 சிக்சர்கள்.
Comments are closed.