தளபதி ’69’ படத்தின் போஸ்டர் வெளியானது…!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கும் விஜய் தனது 69ஆவது திரைப்படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரின் இறுதித் திரைப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார் இந்த நிலையில், புதிய போஸ்டருடன் தளபதி 69 படத்தின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. விஜய் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் புதிய போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளது படத்தின் தயாரிப்பு குழு. அதில் “The Torch bearer of democracy” என்ற ஆங்கில வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இந்த வாசகம் போலவே விஜய்யின் இறுதிப் படத்தின் தலைப்பும் அரசியல் சார்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.