செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 7வது ரவுண்டும் டிராவில் முடிந்தது

தற்போதைய உலக செஸ் சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரென் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையில், ஃபிடே உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டிகள் 14 ரவுண்டுகளாக சிங்கப்பூரில் நடந்து வருகின்றன. ஏற்கனவே முடிந்துள்ள 6 சுற்றுகளில், இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். 4 போட்டிகள் டிரா ஆகின.இந்நிலையில் நேற்று 7வது சுற்று போட்டி நடந்தது, 72 நகர்த்தல்களுக்கு பின் போட்டி டிரா ஆனது. இதையடுத்து, இருவரும் தலா 3.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்

- Advertisement -

Comments are closed.