வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை ரத்துசெய்தது மத்திய அரசு…!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விவசாயிகள் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை(MEP) மத்திய அரசு நிர்ணயம் செய்தது. இதன்படி ஒரு டன் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 550 அமெரிக்க டாலர் (சுமார் 46 ஆயிரம் ரூபாய்) நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்படி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வெளிநாடுகளில் இந்த விகிதத்தை விட குறைவான விலைக்கு விற்க முடியாது. இந்த நிலையில்,வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை வரம்பை ரத்து செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விளைபொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.

 

 

- Advertisement -

Comments are closed.