சென்னை உயர்நீதிமன்றம், ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் என நீதிமன்றம் கூறியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற வீரபாரதி, முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர், அரசின் விடுதலை பரிந்துரையை ஆளுநர் நிராகரித்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. “ஆமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்” என உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, நீதிபதிகள் மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளனர்.
Comments are closed.