தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை… அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள் !

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.6,885  -க்கும் ஒரு சவரன் ரூ.55,080க்கும், விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 21-ம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.75 அதிகரித்து ரூ.6,960 -க்கும் ஒரு சவரன் ரூ.55,680க்கும், விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.61 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,701 க்கும், ஒரு சவரன் ரூ. 45,608 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.98.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.