ஆபரணத் தங்கத்தின் விலை கிடு கிடு உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.11) சவரனுக்கு ரூ 640 உயர்ந்துள்ளது. கடந்த இரு தினங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் மீண்டும் ரூ 58 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் டிசம்பர் 11 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 58,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ 1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ 103-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
Comments are closed.