சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு..!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, அவரது மகன் பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும், மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
Comments are closed.