விநாயகர் சதுர்த்தி அன்று பத்திரப்பதிவு கிடையாது…!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அதிக பத்திரங்கள் பதிவாகும், 100 சார் பதிவாளர் அலுவலகங்கள், சனிக்கிழமையும் செயல்பட்டு வந்தன. இதனால், பொதுமக்கள் தங்கள் வேலை பாதிக்காமல், பத்திரப்பதிவு மேற்கொள்ள இது வாய்ப்பாக அமைந்தது. இந்த நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை (07.09.2024) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படாது என தமிழக பத்திரப் பதிவு துறை அறிவித்துள்ளது. அடுத்த வாரம் அதாவது செப்டம்பர் 14 ஆம் தேதி வழக்கம் போல் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.