காலையில் பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது இந்த தவறை செய்கிறார்கள்: இந்த ட்ரிக்க யூஸ் பண்ணுங்க!
பெரும்பாலும் மக்கள் காலையில் பைக்கை ஸ்டார்ட் செய்த உடனே புறப்பட்டு விடுவார்கள். ஆனால் இங்கே அவர்கள் ஒரு சிறிய தவறையே மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். இது பைக்கின் இன்ஜின் மற்றும் கிளட்ச் பிளேட்டின் ஆயுளைக் குறைக்கிறது. என்ஜின் பாதிக்கப்பட்டு வருவதை நம்மால் உடனடியாக உணர முடியாது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு என்ஜின் பாதிப்பு பைக்கில் பல சிக்கல்களை ஏற்படுத்த தொடங்குகிறது. 10 வினாடிகள் வார்ம் அப் செய்தால் போதும். இந்த நேரத்தில் நீங்கள் பைக்கை அதிகமாக ரைஸ் செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆரம்பித்தில் 20-30 கி.மீ. வேகத்தில் சிறிது தூரம் ஓட்டவும். இதைச் செய்த பிறகு, நீங்கள் பைக்கின் வேகத்தை அதிகரிக்கலாம்.இதனால் நீண்டநாள் பைக் பழுதடையாமல் இருக்கும்.
Comments are closed.