அரசு பஸ்களில் டிக்கெட் புக்கிங்… TNSTC…!

தமிழக பொதுப்போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் (TNSTC) மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலியை, ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு திட்டத்தை (OTRS) போக்குவரத்துத் துறை அமைச்சர் இன்று துவக்கி வைத்தார். இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (SETC) மற்றும் TNSTC பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் செயலி, தினசரி 2,600 பேருந்துகளில் 1.24 லட்சம் இருக்கைகளை எளிதாகவும், விரைவாகவும் முன்பதிவு செய்யும் வசதிகளை கொண்டுள்ளது. பயணிகள் மேம்படுத்தப்பட்ட www.tnstc.in என்ற இணையதளத்திலும் அல்லது TNSTC கைபேசி செயலியினை முக்கிய தளங்களில் பதிவிறக்கவும் செய்து பயணச்சீட்டை முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

- Advertisement -

Comments are closed.