டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 பணியில் 507 இடங்கள், குரூப் 2ஏ பணியில் 1820 பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் உள்ளன. இதற்கான குரூப்2, 2ஏ முதல் நிலை போட்டித் தேர்வு கடந்த செப்டம்பர் 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான தற்காலிக விடைகுறியீடுகளை டி.என்.பி.எஸ்.சி. https://tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த 2,327 காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், தற்போது மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்து உள்ளது.
Comments are closed.