இன்றைய நிலவரம் : சற்று உயர்ந்த தங்கம் விலை…

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து சற்று ஆறுதல் அளித்தது. இந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,295-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.