தமிழகத்தில் புதிதாக 3 இடங்களில் சுங்கச்சாவடிகள்

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுமார் 40க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணங்களை வசூலித்து வருகிறது. ஆண்டுக்கு இருமுறை சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. பாதி சுங்கச்சாவடிகளில் முதல் 6 மாதத்திலும், மீதியுள்ள சுங்கச்சாவடிகளில் அடுத்த 6 மாதத்திலும் கட்டணம் உயர்த்தப்படும். தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த நிலையில், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான கட்டண வீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.