டாப் 10 பைக் மாடல்கள்
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த ஆண்டு ஏராளமான மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
பஜாஜ் பல்சர் என்125
பஜாஜ் நிறுவனம் பல்சர் என்125 மோட்டார்சைக்கிளை கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 94,707 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
கவாசகி நிஞ்சா ZX-4RR
கவாசகி நிறுவனத்தின் டாப் எண்ட் மாடல்களில் ஒன்றாக இந்த பைக் கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 9.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கில் 399 சிசி இன்லைன்-4 எஞ்சின் உள்ளது.
ஹோண்டா எஸ்.பி. 125 (2025)
2025 ஹோண்டா எஸ்.பி. 125 மாடல் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 91,771 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் 124சிசி சிங்கில் சிலிண்டர் ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் மைலேஜை சிக்கனப்படுத்தும் ஐடில் ஸ்டாப் சிஸ்டம் உள்ளது.
ஹோண்டா எஸ்.பி. 160 (2025)
2025 ஹோண்டா எஸ்.பி. 160 மோட்டார்சைக்கிள் கடந்த டிசம்பர் 24 ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 162.71 சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிஞ்சா 1100SX
இந்திய சந்தையில் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிஞ்சா 1100SX ரூ. 13.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இதில் 1099சிசி இன்லைன் 4-சிலிண்டர் எஞ்சின் உள்ளது.
Comments are closed.