ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…!

கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன், காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் சுற்றுலா பயணிகள், மக்கள் குளிக்க மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்துள்ளார்.

- Advertisement -

Comments are closed.