திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே ரயில் சேவை ரத்து…! தெற்குரயில்வே அறிவிப்பு…!

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பிட் லைன் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 9 ம் தேதி முதல் அக்டோபர் 3 ம் தேதி வரை திருச்செந்துர் – திருநெல்வேலி இடையிலான பாசஞ்சர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, காலை 8.15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்படும் ரயிலும் (வண்டி எண் : 06674), மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் புறப்படும் ரயிலும் (வண்டி எண் : 06409) ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

Comments are closed.