திருச்சியில் 7-ம் வகுப்பு மாணவி ஐஸ் கட்டிகளில் அமர்ந்தபடி சிலம்பம் சுற்றி சாதனை…

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தன்யாஸ்ரீ. தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வரும் இவர் மலைக்கோட்டை பகுதியில் நேற்று சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டார். அதன்படி மாணவி தன்யாஸ்ரீ 200 கிலோ ஐஸ் கட்டிகள் மீது கால்களை விரித்தபடி அமர்ந்து சிலம்பம் சுற்றினார். தொடர்ந்து 21 நிமிடங்கள், 21 வினாடிகள் அமர்ந்தபடி சிலம்பம் சுற்றி அவர் இந்த சாதனையை படைத்தார். இதனை ரெக்கார்ட்ஸ் இந்தியா அகாடமி நிறுவனர் ஜெட்லி நேரில் ஆய்வு செய்து, சாதனைக்கான சான்றிதழ், கோப்பை மற்றும் பதக்கத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவியின் உறவினர்கள், சக வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவியை பாராட்டினர்.

- Advertisement -

Comments are closed.