திருச்சி-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்..!!

திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை, திங்கள், வியாழன் தவிர்த்து இந்த சிறப்பு  ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் (வண்டி எண் 06190) திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூர்,கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கமாக இந்த சிறப்பு ரயில் (வண்டி எண் 06191) சென்னை தாம்பரத்தில் இருந்து, மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

Comments are closed.