வானிலை தகவல்களை தெரிந்து கொள்ள புதிய செயலி : திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்…
திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஐ ஏ எஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைவெள்ளம் குறித்த தகவல்களை முன்கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு தமிழக அரசு டி.என்.அலர்ட் என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலமாக பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்துகொள்ளலாம். பேரிடர் காலத்தில் எச்சரிக்கை நிலவரங்கள் குறித்து அறிய மிகவும் பயனுள்ளதாக உள்ள டி.என்.அலர்ட் என்ற செல்போன் செயலியை பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இலவச தொலை பேசி எண் 1077 (0431-2418995) என்ற எண்ணிலும் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Comments are closed.