திருச்சி புதூர் உத்தமனூர் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்…

திருச்சி  லால்குடி அருகே புதூர் உத்தமனூரில் பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு பாலமுருகன், மகாகணபதி, இடும்பன், கடம்பன் சாமிகள் எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நாளை 15/09/2024 காலை நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று காலை 5 மணிக்கு மங்கள மகாகணபதி பூஜை, கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இன்று 14/09/2024 காலை 8 மணி முதல் மகாகணபதி பூஜை, வருண பூஜை, புண்யாகவாசனம், துவாரதோரணபாலிகா பூஜை, கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், கும்பஸ்தாபனம், கோபூஜை மற்றும் முதல் கால யாகபூஜை நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், இரவு 9 மணிக்கு மருந்து சாத்துதல் நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி முதல் சித்திகணபதி பூஜை, துவார தோரண பாலிகாபூஜை, 3-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹுதி, கிரகபிரீத்தி, யாத்திராதானம், கடம்புறப்பாடு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும் அதனை தொடர்ந்து அலங்கார அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.