திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில்ரூ.10 லட்சத்தில் கொடிமரங்கள்…
பஞ்ச பூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்–அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் சுவாமி சன்னதி முன் பெரிய கொடி மரமும் மற்றும் சாமி சன்னதியை சுற்றிலும் அஷ்டதிக்கு கொடிமரங்கள் உள்ளன. இந்தக் கொடி மரங்கள் பழுதடைந்த காரணத்தால் கடந்த மே மாதம் 2-ந் தேதி பாலாலயம் செய்யப்பட்டு அகற்றப்பட்டன. இந்நிலையில் ரூ. 10 லட்சத்தில் உபயதாரர் மூலம் கொடி மரங்கள் செய்யப்பட்டன. இந்த கொடி மரங்கள் நேற்று காலை நடப்பட்டன. வரும் ஐப்பசி மாதத்தில் புதிய கொடி மரங்களுக்கு கவசங்கள் சாற்றப்படும். இதில் சாமி கொடிமரம் மற்றும் அட்டத்திக்கு கொடி மரங்களில் ஒன்றான வருண பகவான் கொடிமரங்களுக்கு தங்க முலாம் பூசப்படும். மற்ற கொடி மரங்கள் தாமிரத் தகட்டால் கவசங்கள் செய்யப்பட உள்ளன. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் கல்யாணி, தஞ்சாவூர் துணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.